பிளஸ் 2 உயிரியல் பொது தேர்வில், மூன்று மதிப்பெண் கொண்ட கேள்விக்கு, இரண்டு பதில்கள் உள்ள நிலையில், எந்த பதிலை & 'கீ நோட்&'டாக தேர்வாணையம் எடுத்துக் கொள்ளும் என தெரியாமல் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
உயிரியல் பாடத்தில் விலங்கியல் பகுதி பி பிரிவில், 19வது கேள்வியாக டிரான்ஸ்டக்சன் என்றால் என்ன? என கேட்கப்பட்டிருந்தது. இதற்கு அரசு வழங்கிய பாடப்புத்தகத்தில், 61ம் பக்கத்தில் ஒரு பதிலும், 99ம் பக்கத்தில் ஒரு பதிலும் உள்ளன. ஒன்று பாக்டீரியாவில் நடைபெறக்கூடிய ஜீன், மறுசேர்க்கையின் ஒரு வகையையும், மற்றொன்று கண் உணர்வின் செயல் குறித்தது. இந்த இரு பதில்களும் சரியாக இருந்தாலும், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கீ நோட்&' படி, ஏதேனும் ஒரு பதிலை மட்டும் குறிப்பிட்டிருந்தால், மற்ற பதிலை எழுதியது தவறாகும் பட்சத்தில், மூன்று மதிப்பெண் இழக்க நேரிடும் என்ற அச்சம் மாணவர்களிடையே நிலவுகிறது.
இதனால், மருத்துவ கல்லூரி கவுன்சிலிங் செல்ல இருக்கும் மாணவர்கள், மதிப்பெண் குறைந்து, பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, இரண்டு பதிலில் எதை எழுதியிருந்தாலும், உரிய மதிப்பெண் வழங்கும்படி, &'கீ நோட்&' தயாரிக்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.