பட்ஜெட் விவரம் பின்வருமாறு:
* புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் வீடு கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* புயல் பாதித்த 2 மாவட்டத்தில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* தமிழ்நாடு கட்டமைப்பு வாரியம் அமைக்க விரைவில் சட்டம் இயற்றப்படும்.
* நடப்பாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.3% ஆக உயர்த்தப்படும் .
* தமிழக பொருளாதார வளர்ச்சியில் சேவைத்துறை வளர்ச்சியே பெரும் பங்கு வகிக்கும்.
* நகர்ப்புற வறுமையைப் போக்க தமிழக நகர்ப்புற வாழ்வாதார திட்டம் துவக்கம். வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான பரிமாற்றங்களில் வெளிப்படை தன்மை.
* பேரிடர்களை சமாளிக்க சிறப்பு பயிற்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்படும்.
* தனியார் துறையுடன் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டம்.
* 4340 காவலர் குடியிருப்பு கட்ட ரூ.400 கோடி ஒதுக்கீடு.
* நடப்பு ஆண்டில் முதன்மைத்துறை 2.36 சதவீதமாகவும் உற்பத்தித்துறை 7.12 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. வரும் ஆண்டில் முதன்மைத்துறை மற்றும் உற்பத்தித்துறை அமைக்க நடவடிக்கை.
* சாலை பாதுகாப்பிற்காக பட்ஜெட்டில் ரூ.65 கோடி ஒதுக்கீடு.
* ஓட்டுனர் பயிற்சி பள்ளி அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
* தீயணைப்பு துறைக்கு ரூ.197.6 கோடி ஒதுக்கீடு.
* வேளாண்துறைக்கு முன் எப்போதுன் இல்லாத அளவுக்கு ரூ.3.8 கோடி ஒதுக்கீடு.
* தனியார் துறையுடன் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டம். மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு.
* நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு.
* நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* விவசாய விலைப்பொருள் கிடங்கு அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* தமிழகம் முழுவதும் உள்ள 49 விரைவு நீதிமன்றங்கள் நிரந்தரமாக்கப்படும்.
* சென்னையில் வெற்றி அடைந்த இ- சவான் திட்டத்தை 5 மாவட்டங்களில் விரிவாக்க திட்டம்.
* கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.4000 பயிர் கடன் வழங்கப்படும்.
* நாட்டுக்கோழி வளர்க்க சிறப்பு திட்டம்.
* ஆடு,மாடு வழங்க ரூ.244 கோடி ஒதுக்கீடு.
* விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க திட்டம்.
* வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்த புதிய மின் ஆளுமை திட்டம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.