Pages

Wednesday, February 22, 2012

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிட முடிவு


Bullet-06-june.gif (5365 bytes)பள்ளிக் கல்வித் துறையில், புதிதாக 1,152 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களின் தேர்வுப் பட்டியலை, இம்மாத இறுதிக்குள் வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
Bullet-06-june.gif (5365 bytes) கடந்த 2010-11ம் ஆண்டுக்கான, 1,152 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தகுதியானவர்களின் விவரங்களை பெற்று, அவர்களுக்கு, கடந்த 7, 8, 9 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.
Bullet-06-june.gif (5365 bytes) இதற்கிடையே, பார்வையற்ற மற்றும் உடல் ஊனமுற்ற 198 பேரின் பட்டியல் விடுபட்டதாகக் கூறி, அவர்களின் பதிவு மூப்பு விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. இவர்களுக்கு, 20, 21 ஆகிய தேதிகளில், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
Bullet-06-june.gif (5365 bytes) இந்தப் பணிகள் முடிந்ததும், இன சுழற்சி வாரியாக, பதிவு மூப்பு தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை தொகுத்து, இம்மாத இறுதிக்குள் தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள், மார்ச் மாதத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.